திண்டுக்கல் தேனி மாவட்ட அனைத்து அரசு தனியார் பேருந்துகளை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரி மனு

மணப்பாறை ஜுலை 28

மணப்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கடந்த ஞாயிறு  நடைபெற்ற  அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்ட முடிவின்படி  மாவட்ட ஆட்சித் தலைவரிடம்  அனைத்துக் கட்சி  சார்பில்  பஞ்ச பூரில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு கூடுதல் கட்டனம் மற்றும் கூடுதல் நேர செலவை தவிர்க்க திண்டுக்கல் தேனி மாவட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளை ஏற்கனவே இயங்கிவந்த மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம்  மனு கொடுத்தனர் 

  அம்மனுவில்      திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் இருந்து திருச்சி வரும்  அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள்  மணப்பாறை வழியாக செல்கிறது இப் பேருந்துகளில்   தினசரி ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பொது மக்களை  திருச்சிக்கு அழைத்து வந்து மத்திய பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு பஞ்சபூர் செல்கிறார்கள் வரும் போது கட்டடணம் ரூ 33 தான் மாலையில்  ஊர் செல்ல மத்திய பேருந்து நிலையம் வந்தால்  இறக்கி விட்ட  திண்டுக்கல் தேனி மாவட்டம் செல்லும் எந்த பேருந்தும் வருவதில்லை திரும்ப  நகரப் பேருந்தில் 
ரு 10 செலுத்தி பஞ்சப்பூர் சென்று திரும்பி வரவேண்டிய நிலையுள்ளது

எனவே திண்டுக்கல்,பழனி, தேனி மாவட்ட அனைத்து அரசு தனியார் பேருந்துகளை திருச்சி   மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று கூறிவுள்ளனர்.
Previous Post Next Post