கலவை நல்லூரில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு: 30 குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது

ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை நல்லூரில் அமைந்துள்ள சித்தார்த்தர் இலவச இரவு பள்ளி மற்றும் சித்தார்த்தர் புத்தர் திருக்கோயில் சார்பில், ஜெய் பீம் இரவு பள்ளி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் ஆடி மாத பௌர்ணமி திரி ரத்தின வந்தனா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது, கூட்டமைப்பின் 24-வது செயல்திட்டமான ‘பீ வா அட்சய’ திட்டத்தின் கீழ், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 30 ஏழை குடும்பங்களுக்கு தலா 5 கிலோ பொன்னி அரிசி நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பெளத்த அமைப்பினர், மாணவ-மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post