மறைந்த பாரதிராஜாவின் 30ஆம் நாள் துக்க நிகழ்ச்சி - குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சடங்குகள் செய்து மரியாதை


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு பாரதிராஜாவின் உடலுக்கு மரியாதை செய்தார்*

மறைந்த பாரதிராஜாவின் 30 ஆம் நாள் துக்க நிகழ்ச்சி இன்று தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட்ரோட் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடைபெற்றது


இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் அவரது உடல் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட்ரோட் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது 

இந்த நிலையில் இன்று 30 ஆம் நாள் துக்க நிகழ்ச்சியினை அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சடங்குகள் மற்றும் சம்பிரதாயம் செய்து அஞ்சலி செலுத்தினர் 

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட பண்ணை வீட்டிற்கு நேரடியாக வருகை தந்து பாரதிராஜாவின் 30 ஆம் நாள் துக்க நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்

இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் மற்றும்  நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Previous Post Next Post