தந்தையர் தினத்தை முன்னிட்டு, விடியல் ஆரம்பம் மற்றும் NAARC TRUST இணைந்து, குமாரபாளையம் ஸ்ரீ வாசவி மகாலில் அரசு பள்ளிகளில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் நோக்கிலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்புத்தகங்கள், எழுதுபொருட்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு விடியல் பிரகாஷ் தலைமை வகித்தார். தினக்கல்வி சசிகுமார் வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் யோகராஜ், ஸ்டீவ் ரோஜர், பிரகதேஷ், தருண், கவின், பரத்,பூர்ணா, ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் பஞ்சாலை சண்முகம்,தீனா,சித்ரா பாபு, பெஸ்ட் பாலாஜி,யோகா தினேஷ்,போட்டோ ஆனந்,புவனா, நாகராஜ்,ஜமுனா, ராணி, சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காகவும் இதுபோன்ற கல்வி மற்றும் சமூகநலப் பணிகளை விடியல் ஆரம்பம் மற்றும் NAARC TRUST இணைந்து தொடர்ந்து மேற்கொள்ளும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
விழா முடிவில் டிஸ்கோ சம்பத் நன்றியுரை வழங்கினார்.