தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் அரசு மருத்துவமனையில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜனாத் மிஸ்ரா அவர்கள் முதலமைச்சர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நோயாளிகளுக்கு பால் பழம் பிரட் பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி நலம் விசாரித்தார் மருத்துவமனையின் பணியாளர்களிடமும் நோயாளிகளிடமும் எவ்வாறு செயல்படுகிறது என்று கேட்டு அறிந்தார் தேவைப்படும் உதவிகளை எந்தவித தாமதமும் இன்றி உடனடியாக செய்து தருவேன் என வாக்குறுதி அளித்தார்.
மேலும் அங்கிருந்த அம்மா உணவகத்திற்கு சென்று ஆய்வு செய்த எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா அவர்கள் தானும் சாப்பிடுவதாக கூறினார் ஊழியர்கள் உடனடியாக தோசை சுட்டு வழங்கினார்.
மற்றொரு பயனாளியும் அருகே தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அவரிடம் உணவுகள் எவ்வாறு வழங்குகிறார்கள் உணவில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என கேட்டறிந்து ஊழியர்களிடம் உணவகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் உணவு பாதங்களை பாதுகாப்பாக வைத்து உணவு உண்ண வருபவர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுரைகள் கூறி சென்றார்.....