சமியுத்த கிசான் மோர்ச்சா தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்கித்சிங் தல்லேவால் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் அமெரிக்க இந்திய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண் பொருட்களை இணைக்க கூடாது என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக ஒருங்கிணைப்பாளர்
பி ஆர் பாண்டியன் பங்கேற்று பேசிய பின்னர் செய்தியாளர்களிடம்
தெரிவித்த தாவது:
மத்திய அரசு அமெரிக்காவோடு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜூன் 23 24 25 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. 25ஆம் தேதி அனேகமாக ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே விவசாயிகள் இந்தியாவில் உற்பத்தி செய்கிற பொருட்களை வரியின்றி தடையின்றி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து சந்தைபடுத்தி கொள்வதற்கு
வழிவகுக்கும்.
ஏற்கனவே ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுமையிலும் போராடி வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் வர்த்தக ஒப்பந்தம் குறித்து வெளிப்படையான விவாதத்திற்கு மத்திய அரசு அனுமதிக்க முன்வரவில்லை. விவசாயிகளிடமும் கருத்து கேட்கவில்லை.
இந்நிலையில் தன் விருப்பத்திற்கு மத்திய அரசு அமெரிக்காவோடு தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளத மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு இந்தியாவில் வெளிநாடுகளிலிருந்து வேளாண் உற்பத்தி பொருட்களை தடையில்லாமல் இறக்குமதி செய்வதற்கு
அனுமதி மறுக்க வேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.
போராட்டத்தில் அபிமண்யூகொஹார், கிருஷ்ணகிரி பாலசிவபிரசாத் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.