திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வெண்ணவாசல் கிராமத்தில் உள்ள ஶ்ரீ கல்லுளி மகா மாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் கடந்த 23ஆம் தேதி முதல் கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இன்று காலை 9 மணி அளவில் நான்காம் கால யாக பூஜையின் நிறைவாக மகா பூர்ணஹுதி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீர் உள்ள கடங்களை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வளம் வந்து கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து முருகன் , விநாயகர், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து புனித நீரை ஊற்றி அபிஷேகம் நடைபெற்று. இதில் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பு....
தமிழர் களம் மாத இதழ்
0