தேனி மாவட்டம் கம்பம் நகரில், தனியார் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.!


சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
அதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள 'ரேஷ்மா மெடிக்கல் மிஷன்' சார்பில் காந்தி சிலை முன்பிருந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி தொடங்கியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கைகளில் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியும், போதைப்பொருளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும், பொதுமக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து, கம்பம் வடக்கு காவல் நிலையம் முன்பு பேரணி நிறைவடைந்தது. அங்கு, போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன நிர்வாகிகள், கன்னார்வலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்......
Previous Post Next Post