தர்மபுரி மாவட்டம், பாளையம் புதூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிறுவனத்தின் மூலம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி முதல் சேலம் மாவட்ட குதிரை குத்தி பள்ளம் வரை, இருபுறமும் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் மரக்கன்று நெட்டு வளர்த்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாளையம் புதூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிறுவனத்தின் மூலம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி முதல் சேலம் மாவட்ட குதிரை குத்தி பள்ளம் வரை, இருபுறமும் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் மரக்கன்று நெட்டு வளர்த்து வருகின்றனர். தாசசமுத்திரம் பகுதியில் புதிதாக அமைந்துள்ள எம் ஆர் பி எல் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள நிழல் தரும் பெரிய மரங்களை பெட்ரோல் பங்க் பார்வைக்கு தெரியவில்லை என்று அதை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வெட்டி உள்ளனர்.இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக சுங்கச்சாவடி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சுங்கச்சாவடி ஊழியர்கள் வந்து மரங்களை வெட்டிய சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Previous Post Next Post