சின்னமனூரில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.!



தமிழ்நாடு தீயணைப்பு (மற்றும்) மீட்புப்பணிகள் துறையின் சார்பாக "வாங்க கற்றுக் கொள்வோம்"என்ற பிரத்யேக தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் தமிழகம் முழுவதும் உள்ள 384 நிலையங்களில் ஜூன்,6 மற்றும் 7ம் தேதியில் காலை 11:00 மணி முதல் 12:00 வரையும் மாலை 04:00 மணி முதல் 05:00 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்ததை தொடர்ந்து, 

தீயணைப்பு (மற்றும்) மீட்புப்பணிகள் துறை இயக்குநர் திருமதி.சீமா அகர்வால் அறிவுறுத்தலின்படி சுவாச கருவிகள் லைஃப் ஜாக்கெட் கயிறு பயன் படுத்தி அடுக்குமாடி கட்டிட உயரங்களில் விபத்தின் போது எவ்வாறு பொதுமக்களையும் பொருட்களையும் மீட்பது இதர உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற செயல்முறை  குறித்து,தேனி மாவட்டம் சின்னமனூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

 அப்போது நிலைய அலுவலர் நிலைய அலுவலர் வெங்கட் குமார், சிறப்பு அலுவலர் ராஜா ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு இயற்கை பேரிடர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது........
Previous Post Next Post