அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் - தேனியில் 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.





*கட்சியில் இணைவதற்கு க்யூ ஆர் கோடு அடங்கிய நோட்டீஸ்களை வழங்கி பொதுமக்களுக்கு அழைப்பு.*

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கினார் "We The leaders" என்ற அமைப்பு மூலம் தன்னார்வலர்கள்   கட்சியில் இணைவதற்கு இணையதள அறிவிப்பை வெளியிட்டிருந்தார் 

இந்த நிலையில் தேனியில் அண்ணாமலை தொடங்கிய புதிய அரசியல்  இயக்கத்தில் இணைந்தவர்கள்  கொண்டாடி மகிழ்ந்தனர் 

தேனி நேரு சிலை பகுதியில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் வருகை தந்த அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டதை கொண்டாடினர் 

தொடர்ந்து கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் க்யூ ஆர் கோட் கொண்ட நோட்டீசுகளை வழங்கி கட்சியில் இணைவதற்கு அழைப்பு விடுத்தனர் இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்......
Previous Post Next Post