தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு...



தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு விவசாய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் 31 இடங்களில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று அதே கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழக முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி, மாங்குடி, நீடாமங்கலம், வலங்கைமான்,திருத்துறைப்பூண்டி, கோட்டூர் , முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டத்தில் 31 இடங்களில் சிபிஐ கட்சியின் விவசாய சங்கமான தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழக அரசு உடனடியாக விவசாய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பபட்டன. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வெட்டாற்று பாலத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் கேசவராஜ் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஏராளமான கலந்துகொண்டு சாலை மறியல் செய்தனர். இதனால் தஞ்சாவூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Previous Post Next Post