மன்னார்குடி அருகே 7 கூரை வீடுகள் தீயில் எரிந்து சேதமானது. முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த சவளக்காரன் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (42). விவசாய கூலி தொழிலாளி. இவரது கூரை வீடு மின் கசிவு காரணமாக நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென அருகில் உள்ள தாமரைச்செல்வன், கலையரசி, இந்திராணி, கௌசல்யா, சுமதி, செல்வராஜ் ஆகியோர்களின் கூரை வீடு களுக்கும் பரவியதில் 7 கூரை வீடுகள் முழுவதும் எரிந்து சேதமானது. தீவிபத்தின் காரணமாக வீடுகளில் இருந்த நகைகள், ரொக்க பணம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி 7 பேருக்கும் நிதி உதவி வழங்கினார்.
Previous Post Next Post