மேகதாதுவில் அணை கட்டுவோம் என சண்டியர் தினமாய் சவால் விடும் கர்நாடக முதல்வரின் போக்கிரி போக்கை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாவட்ட மகளிர் அமைப்பினர் கும்மியடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணப்படுகிறது மழையை மட்டுமே நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தால் தமிழக அரசிடம் அனுமதி கேட்க மாட்டோம் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியதை கண்டித்து தமிழகம் முழுவதும் டெல்டா மாவட்ட விவசாயிகள் கர்நாடக அரசு கண்டித்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என சண்டியர் தினமாய் சவால் விடும் கர்நாடக முதல்வரின் போக்கிரி போக்கை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட மகளிர் அமைப்பினர் சார்பில் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன குரல் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி 250 க்கு மேற்பட்ட மகளிர் அணியினர் கர்நாடக அரசு கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Previous Post Next Post