பொதுமக்களிடம் கூறிய முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய அமைச்சர் வன்னி அரசு.


குறைகளை கேட்டறிய 25 வருடங்களாக பூட்டி கிடந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு.



திண்டிவனம், ஜூன்.6
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 25 ஆண்டுகளாக பூட்டியே வைத்திருந்த நிலையில் கடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் தனது பதவிக்காலம் முழுவதும் அலுவலகத்தை பயன் படுத்தாமல் பூட்டி வைத்திருந்தார். மேலும் தனியாக அலுவலகம் கூட அமைக்காததால் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை கூட அளிக்க முடியாமல் அவதி அடைந்தனர். இந்நிலையில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வி.சி.க சார்பில் போட்டியிட்ட வன்னி அரசு வெற்றி பெற்றார். அவர் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானதாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திருக்கப்படும் என்றும் பொதுமக்கள் அனைவரும் நேரடியாக என்னை தொடர்பு கொண்டு மனுக்களை அளிக்கலாம் என்றும் கூறினார்.அதன் படி மே 16 ஆம் தேதி மதியம் பூட்டி கிடந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அலுவலகத்தை சுற்றி உள்ள குப்பை கழிவுகள் முட்புதர்களையும் பார்வையிட்ட அவர் பல ஆண்டுகளாக பூட்டி கிடப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அலுவலகத்தை விரைந்து புனரமைக்க அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்களின் குறைகளை நிறைவேற்றும் ஒரு அலுவலகமாக உடனடியாக இந்த அலுவலகம் செயல் பட வேண்டும். என தெரிவித்தார்.இந்நிலையில் புனரமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக வன்னி அரசு திண்டிவனம் தொகுதிக்கு வருகை தருவதால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து புனமைக்கபட்ட அலுவலகம் திறக்கும் விழா நேற்று மாலை 6.40 மணியளவில் நடைபெற்றது. அலுவலகத்தை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விசிக தலைவருமான தொல் திருமாவளவன், ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து அமைச்சர் வன்னி அரசு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.இதில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான்,சார் ஆட்சியர் ஆகாஷ்,நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்,விசிக துணை பொது செயலாளர் சிந்தனை செல்வன்,வட்டாட்சியர் ஏழுமலை, மாவட்டஅரசு தலைமை மருத்துவமனை தலைமைமருத்துவர் முரளி ஸ்ரீ ,நகராட்சி ஆணையர் பானுமதி விசிக நிர்வாகிகள் மண்டல செயலாளர் வழக்கறிஞர் திலீபன்,மாநில ஆவண மைய துணை செயலாளர் வடிவேலு, மாவட்ட துணை செயலாளர்கள் சசிகுமார், கடவம் பக்கம் எழில்மலை மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் இளஞ்சேரன், மாவட்ட உறுதிமொழி ஆணையர் ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் (கி)மாத்தமிழன் கிழக்கு நகர செயலாளர் இமயன் மேற்கு நகர் செயலாளர் எழிலரசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சாக்ரடீஸ்,நகர அமைப்பாளர் வெங்கடேசன்,இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்
அருள்வளவன், திண்டிவனம் நகர நிர்வாகிகள் வழக்கறிஞர் விஸ்பதாஸ், மகேஷ், மாவட்ட மகளிர் அணி ஜனதா பூங்காவனம், நிர்வாக குழு உறுப்பினர் அர்ச்சனா ஜேம்ஸ், ஒலக்கூர் ஒன்றிய து.செயலாளர் சாரம் இளைய வளவன், மாவட்டத் துணை அமைப்பாளர் கீழ் கூடலூர் சிவாநந்தம், சாரம் முகம் தளபதி அமுதவேல், தென்னம்பூண்டி முகாம் தளபதி இராமு வளவன்,உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழகத்தினர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post