வலங்கைமான் வெடி தயாரிக்கும் கிடங்கில் வெடி விபத்து ஒருவர் பலத்த காயத்துடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி

வலங்கைமான்  வெடி தயாரிக்கும் கிடங்கில் வெடி விபத்து ஒருவர் பலத்த காயத்துடன்  தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சம்பவ இடத்தில் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் விசாரணை   
தமிழகத்தில் வெடி தயாரிப்பில் சிவகாசி அடுத்து  திருவாரூர் மாவட்டம்,  வலங்கைமான்  பகுதிகளில் அரசின் உரிய  அனுமதி  பெற்று,  ஒரு சிலர்.  உரிய அனுமதியின்றி யும் நாட்டு வெடி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்  அனுமதியின்றி நாட்டு வெடி தயாரிக்கும் நபர்கள் குறித்து சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறைக்கு தெரியவரும் நிலையில் எந்தவிதமான  நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக  வலங்கைமான் பகுதியில் உள்ள பொதுமக்கள் , சமூக ஆர்வலர் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர் இந்த நிலையில்    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் அருணகிரி என்பவருக்கு சொந்தமான வெடி தயாரிக்கும் கிடங்கில் வெடி தயாரித்து வெயிலில் காய வைத்துள்ளனர்  அப்போது  அதீத வெப்பத்தின் காரணமாக காய வைத்துள்ள வெடிகள் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானதில் கட்டிடம் தரைமட்டமானது அங்கு வெடி தயாரிப்பில் ஈடுபட்ட  ராகுல் என்பவர் பலத்த காயம்  அடைந்துள்ளார் இவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு   அனுப்பி வைத்துள்ளனர்  ராகுல் பலத்த காயங்களுடன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்   சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது  சம்பவம் குறித்து  வலங்கைமான் வட்டாட்சியர் கார்த்தி மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்  வலங்கைமான் பகுதியில் உள்ள வெடி கடைகள் உரிமம் பெற்றுள்ளதா  என்று  மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   ஆகியோர்  நேரடியாக சென்று   முறையாக ஆய்வு  செய்ய வேண்டும் என வலங்கைமான்  பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post Next Post