மத்திய அரசின் பிட் இந்தியா நடத்திய தென்னிந்திய அளவிலான சிலம்பம், கராத்தே உள்ளிட்ட போட்டிகள் கொடைக்கானலில் நடைபெற்றது. சிலம்பம் மற்றும் கராத்தே அசோசியேஷன் மத்திய அரசின் பிட் இந்தியாவுடன் இணைந்து நடத்திய போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் பல்வேறு வயது பிரிவின் கீழ் நடத்தப்பட்ட இது போட்டியில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கன்ஃபிட் உடற்பயிற்சி மையம் சார்பில் இலவச சிலம்ப பயிற்சி வழங்கப்பட்டு அதன் மூலம் பயிற்சி பெற்ற சிலம்ப வீரர்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் பரிசு கோப்பைகளை வென்றனர். இவர்களுக்கான பாராட்டு விழா இன்று மன்னார்குடியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இதில் ஆசிய தடைகள வீரரும், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியுமான நடராஜன், கண்பிட் உடற்பயிற்சி மைய நிறுவனர் நமச்சிவாயம் மற்றும் வருவாய் துறையினர், கலந்துகொண்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள் அதனை தொடர்ந்து சிலம்ப மாணவ மாணவிகளின் செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை வாழ்த்தினர்.
மத்திய அரசின் பிட் இந்தியா நடத்திய சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு மன்னார்குடியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
தமிழர் களம் மாத இதழ்
0