50 ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லாமல் தவித்து வரும் கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என குற்றச்சாட்டு


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு சுடுகாடு வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை வயல் வரப்புகளில் புதைத்து வந்தனர்.பின்னர் 50 ஆண்டுகள் மேலாக நடத்திய போராட்டத்தின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மயான கொட்டகை அரசின் சார்பில் அமைத்து தரப்பட்டது ஆனால் அங்கு செல்வதற்கான சாலை வசதி அமைத்து கொடுக்கப்படவில்லை. இதனால் இறந்தவர்களின் உடல்களை அந்த பகுதி மக்கள் விவசாய நிலங்களின் வழியாக சுமந்தும் செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது. மழைக்காலங்களில் அவர்கள் இறந்த உடலை எடுத்துச் செல்வது மிகவும் துயரமான ஒரு நிகழ்வாக அமையும் அந்த அளவிற்கு கஷ்டப்பட்டு உடலை வயல்வெளிகளில் எடுத்து செல்வார்கள்
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் என நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் தற்போது வரை இந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. 
மனுக்கள் கொடுத்து செய்திகள் வெளியாகும் போதெல்லாம் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதுவரை ஏழு கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 
இந்த முறையாவது புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தமிழக வெற்றி கழகம் அரசு கவனத்தில் கொண்டு இந்த பகுதி கிராமமக்களின் நீண்ட நாள் கோரிக்கை என சுடுகாடு செல்ல சாலை வசதி அமைத்து தரப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். . 
Previous Post Next Post