திருவாரூரில் பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம், நூதனமான முறையில் லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் அதிகம் வைத்து, ஒரு மாதத்தில் மட்டும் 25 லட்சம் ரூபாயை முறைகேடான வகையில் வசூலித்த பெட்ரோல் நிலைய நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..


திருவாரூர் நகரின் மையப் பகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஏஜென்சிஸ் என்ற பெயரில் பெட்ரோல் நிலையம் செயல்பட்டு வருகிறது. திருவாரூர் பழைய பேருந்து நிலையம், கடைத்தெரு, வணிக வளாகம், ரயில் நிலையம் ஆகிய முக்கிய இடங்கள் அருகே இந்த பெட்ரோல் நிலையம் செய்யப்படுவதால் எப்போதும் பரபரப்பாக மக்கள் கூட்டமாக காணப்படும். தினம் தோறும் இந்த பெட்ரோல் பங்கில் 80 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமான பெட்ரோல் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  
நாடு முழுவதும் கடந்த மே 15 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது . தற்போது திருவாரூரில் ஒரு லிட்டர் 108.93 ரூபாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெங்கடேஸ்வரா ஏஜென்சிஸ் என்ற இந்த பெட்ரோல் நிலையத்தில் விலை மாற்றம் செய்யப்பட்டதிலிருந்து, லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் அதிகமாக வைத்து விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.இது குறித்து நேரடியாக விசாரிக்கச் சென்றபோது ஒரு லிட்டர் 108.93 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 110 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் நபருக்கும் ஒரு லிட்டர் மட்டுமே பெட்ரோல் போடப்படுகிறது. இதனால் லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய்க்கு மேல் பொதுமக்கள் இடமிருந்து முறைகேடான வகையில் இந்த பெட்ரோல் நிலையம் வசூலித்து வருவது அட்பட்டமாக தெரிய வருகிறது. அதாவது லிட்டரில் பெட்ரோல் போடுபவர்களுக்கு சரியான விலையில் பெட்ரோல் வழங்கப்படுகிறது. ஆனால் 100,150, 210, 500 ரூபாய்களில் பெட்ரோல் போடுபவர்களிடம் லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய்க்கு மேல் முறைகேடான வகையில் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து பெட்ரோல் நிலைய ஊழியர்களிடம் விசாரித்த போது... பெட்ரோல் விலை உயர்ந்ததிலிருந்து இந்த பெட்ரோல் பம்பில் இருந்து மட்டும் இந்த பிரச்சனை இருந்து வருகிறது. இதனை சரி செய்ய நிர்வாகத்திடம் கூறியுள்ளோம் என்றனர். ஆனால் பொது மக்களோ கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நிலவும் இந்த பிரச்சனையை சரி செய்ய பலமுறை கூறியும் நிர்வாகம் சரி செய்ய மறுத்து வருவதாகவும், இதனால் லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் கடந்த 25 நாட்களுக்கு முன் இந்த பிரச்சனையை சுட்டிக்காட்டி பெட்ரோல் நிலைய ஊழியர்களிடம் புகார் தெரிவித்து சரி செய்ய கூறிய நபர் தற்போது மீண்டும் பெட்ரோல் போடும்போது, தற்போது வரை சரி செய்யாமல் லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் அதிகம் வைத்து விற்பதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறு நடைபெற்றது தெரிந்தும் அதை பெட்ரோல் நிலைய நிர்வாகம் சரி செய்யாமல், முறைகேடான வகையில் பொதுமக்களிலிடமிருந்து இருந்து பணத்தை பறிக்கும் நோக்கத்திலே செயல்பட்டு வருவதாக திருவாரூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 பெட்ரோல் விலை மாற்றம் செய்யப்பட்ட இந்த ஒரு மாதத்தில் மட்டும் பொதுமக்களில் இருந்து 25 லட்சம் ரூபாய் வரை முறைகேடான வகையில் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வால் டீ, காபி, இட்லி, தோசை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் பன்மடங்கு உயர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், முறைகேடான வகையில் லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அரசு தலையிட்டு இதனை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Previous Post Next Post