கர்நாடக தலைமைச் செயலாளர் தமிழ்நாட்டில் குறுவைக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாக கடிதத்திற்கு கண்டனம் .


கர்நாடக தலைமைச் செயலாளர் தமிழ்நாட்டில் குறுவைக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாக கடிதத்திற்கு கண்டனம் .

மத்திய நீர் வள ஆணைய தலைவர்  காவிரி டெல்டாவை நேரில் பபார்வையிட உள்ளார்.

ஜூன் 30 கடன் தள்ளுபடி கோரி சென்னையில் உண்ணாவிரதம்.
பிஆர்.பாண்டியன் தகவல்

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பி ஆர் பாண்டியன் மத்திய நீர்வள ஆணைய தலைவர் அனுபம்பிரசாத், உறுப்பினர் செயலரும்,மேகதாட்டு திட்டத்தின் பொறுப்பு அதிகாரியுமான
யோகேஷ்பாட்டன்கர் ஆகியோரை டெல்லி சேவா பவனில் நேரில் சந்தித்து 45 நிமிடம் கலந்துரையாடினோம்.

கர்நாடகம் உபரி நீரை மட்டுமே விடிவித்து வருகிறது.காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கிறது. இந்நிலையில் உபரி நீரையும் தடுத்து காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணையை சட்டவிரோதமாக கர்நாடகா கட்ட முயற்சிக்கிறது. 

முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை 2021 இல் மத்திய நீர்வள ஆணையத்தில் கொடுத்த வரைவு திட்ட அறிக்கையை எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைத்தீர்கள்.
காவிரி மேலாண்மை ஆணையம் திட்ட அறிக்கையை விவாதிக்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளது.

தற்போது முதலமைச்சராக உள்ள டி கே சிவகுமார் சட்டவிரோதமாக மேகதாட்டு அணைக்கு அனுமதி கோரி சந்தித்து வருகிறார்.தமிழக அரசு ஏக நாட்டுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து விட்டதாக கூறி அனுமதி கேட்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் நடவடிக்கையை பின்பற்றி மத்திய நீர் வள ஆணையமும் வரைவு திட்ட அறிக்கையை கர்நாடகாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். 

கர்நாடக விவசாயிகள் மேகதாட்டு அணை கட்டுமானத்தை எதிர்த்து வருகிறார்கள். காரணம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே ஆயிரம் மீட்டர் ஆழத்தில் மேகதாட்டு கட்டப்பட்டால் கிருஷ்ணராஜ சாகரில் பற்றாக்குறை காலத்தில் தண்ணீர் தேக்குவதை கைவிட்டு,குடிநீர் என்கிற பெயரில் மேகதாட்டுக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்.எனவே மேகதாட்டு அணை கர்நாடகத்திற்கு தேவையில்லை என கர்நாடகா விவசாயிகள் ஒருமனதாக தீர்மானித்துள்ளார்கள். 
மேலும் பெங்களூரில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் தருவதற்காக கர்நாடகம் தமிழக விவசாயத்தை அழிப்பதற்கு எடுக்கும் சட்டவிரோத  நடவடிக்கைக்கு
மத்திய அரசு துணை போகக்கூடாது என்பதை வலியுறுத்தினோம். 

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகளோ நீர்த்தேக்கங்களையோ கர்நாடகா கட்டக்கூடாது என காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளது.அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அரசிதழில் வெளியிடப்பட்ட ஆண்டு முதல் 15 ஆண்டுகளுக்கு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் எந்த ஒரு மாற்றமும் செய்ய இயலாது என்பதையும் உத்தரவிட்டுள்ளது.
இதனைப் பின்பற்றி சட்டவிரோதமாக மேகதாட்டு அணை கட்ட அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தினோம்

மேலும் தமிழக காவிரி டெல்டாவில் நடப்பாண்டு (2026) குறுவைக்கு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் மிகப்பெரிய இழப்பை  டெல்டா விவசாயிகள்
சந்தித்திருக்கிறோம்.
எதிர்காலத்தில் சம்பாவிற்கும் தண்ணீர் கிடைக்குமா? கிடைக்காதா ? என்கிற சந்தேகத்தில் உள்ளோம்.

கர்நாடக தமிழக விவசாயிகள் 
ராசிமணலில்  தமிழகம் அணைக்கட்டிக் கொண்டால், வலது கரை கர்நாடகாவிற்கு சொந்தம் என்பதால் தேவையான குடிநீரை கர்நாடகம் எடுத்துக் கொள்ளலாம் என்கிற அடிப்படையில் 2024ல் இரு மாநில விவசாயிகளும் மைசூரில் ஒன்றாக அமர்ந்து பேசி முடிவெடுத்துள்ளோம் என்பதை எடுத்துரைத்தோம். 

காவிரி டெல்டாவில் கடல் முகத்துவார நதிகள் மறுசீரமைப்பு திட்டத்திற்கான அனுமதியை 6ஆண்டு காலம் மத்திய அரசு அனுமதி வழங்காததால் கடல் நீர் 
உட்ப்புகுவதை தடுக்க  முடியவில்லை என்பதையும் எடுத்துரைத்தோம். 

இது குறித்து பதில் அளித்த அனுபவம் பிரசாத் மற்றும் யோகேஷ்பாட்டன்கர் இருவரும் தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர்.
ராசிமணல் அணை குறித்து தமிழக அரசு இதுவரையிலும் கோரிக்கை வைக்கவில்லையே? என வினவினர்.
மேகதாட்டு அணை பிரச்சனையில் சட்டப்படியும், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் பின்பற்றுவோம்.

நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு உரிய 78 டிஎம் சி தண்ணீர் தமிழ்நாட்டில் உள்ளதாக கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.  தற்போது குருவை சாகுபடி மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கிறீர்கள் என்றனர்.

மேலும் விரைவில் கர்நாடகா தமிழக காவிரி டெல்டா பாசனப் பகுதியையும், அணைகளையும் நேரில் பார்வையிட வருகிறோம்.அது குறித்து உங்களுக்கு உரிய முறையில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும் என உறுதி அளித்தனர்.

மேலும் வெண்ணாறு கடல் முகத்துவார நதிகள் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அனுமதி தர தயாராக உள்ளோம்.
ஆனால் இத்திட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளதாக இருவரும் தெரிவித்தனர்.

இதற்கு பதில் 
அளித்த போது கர்நாடக தலைமைச் செயலாளரின் கடிதம் உண்மைக்கு புறம்பானது தற்போது குருவை சாகுபடி மேற்கொள்ள முடியாமல் தரிசாக கிடைக்கிறது.தவறான தகவல் எழுதிய கர்நாடக தலைமைச் செயலருக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறோம்
என்றேன்.

மேலும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வழங்கியது முதல் இன்று வரையிலான நடவடிக்கைகளை மிக விரிவாக கேட்டறிந்தனர்.காவிரி நடுவர் மன்றம் அமைத்தது முதல் இன்று வரை செயல்முறைகளை
விரிவான குறித்த கடிதமும் அளித்தோம். இக்சந்திப்பு தமிழகத்திற்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்தது.

தமிழக அரசு தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அடிப்படையில் சிறுகுறு விவசாயிகளுக்கு 100% ம் பெரு விவசாயிகளுக்கு 50% ம்நிலத்தின் அடிப்படையில் மத்திய அரசு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி வேளாண் கடன் முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும்.

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ௹3500 விலை நிர்ணயம் செய்து செப்டம்பர் 1 முதல் கொள்முதல் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 30-ஆம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார், மற்றும் ஆணைய உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்து விரிவாக எடுத்துரைத்தோம் என்றார்.

கிருஷ்ணகிரி 
பாலசிவபிரசாத், தொட்டியம் சஞ்சீவி ஆகியோர் உடன் இருந்தனர்.

Previous Post Next Post