பிரம்மதேசத்தில் சி.கே. அறக்கட்டளை திறப்பு
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர் அறுசுவை சமபந்தி உணவு வழங்கல்
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலர் தலைவர்.pS அமல்ராஜ் திறந்துவைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் பிரம்மதேசம் பஸ் நிலையம் அருகில் சி.கே.அறக்கட்டளை திறப்பு மற்றும் டாக்டர். அம்பேத்கர் பிறந்த நாள் விழா,
பள்ளி,கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் ஊக்கத்தொகை விழா சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவிற்கு தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலர் தலைவர் வழக்கறிஞர்.
பி.எஸ்.அமல்ராஜ் துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார்
அதன் தொடர்ச்சியாக PS அமுல்ராஜ் ஆணைக்கிணங்க
சி.கே. அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அர்ஜுனன் கெளரி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம்(12.00 ) மணிக்கு தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அறுசுவை உணவு (பிரியாணி) பரிமாறும் நிகழ்ச்சியையும் மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய்1000/- வழங்கியும் மற்றும் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பொன்னியம்மன் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீஆலடியான்
ஸ்ரீ கங்கை அம்மன் ஆலய கூழ்வார்த்தல் விழாவை முன்னிட்டு சுமார் 2000 பேருக்கு வேட்டி சேலை மற்றும் 3000 பேருக்கு அறுசுவை கறி விருந்து விழா
சிறப்பாக நடைபெற்றது.
இதில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஞானசேகரன், ஆரோக்கியதாஸ்,அருள், காஞ்சி தளபதி அருள்,புதிய புரட்சிகழகம் கட்சி மாநிலத் தலைவர் இசிஆர். ஓ.இ.சங்கர், தேனை. கவுன்சிலர் அக்கா கற்பகம்,
பிரம்மதேசத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்
சிதம்பரநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ப்ளூமெட்டல் எஸ். ஆர்.வெங்கடேசன். மரக்காணம் திமுக ஒன்றிய பெருந்தலைவர் தயாளன். திண்டிவனம் ஜெயம் எலக்ட்ரானிக் கோதண்டராமன்,ஆர்.ஆர். மூர்த்தியார், சஞ்சய்,ஏ.பி.அன்பு, வி.பி. விஜய், அருள்மணி உள்ளிட்ட ஏராளமான அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பள்ளி,கல்லூரி, மாணவ, மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை சி.கே.அறக்கட்டளை நிர்வாகத்தினரும்
ஆனாஸ் இளம் வழக்கறிஞர்களு மான ஏ.ஜி, பாரதி, ஏ,ஜி வசந்த்,ஏ.ஜி.வசந்த பிரியா உள்ளிட்டோர் செய்திருந்தனர்