“வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்ற பழமொழிக்கேற்ப, அனைவரையும் சிரிக்கவும் மகிழ்ச்சியுடன் ஆடவைத்து யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு, தங்கள் குழந்தைப் பருவ மகிழ்ச்சியை மீண்டும் அனுபவித்தனர்.
வேதா யோகா மையம் மற்றும் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் இணைந்து நடத்திய சிரிப்பு யோகா நிகழ்ச்சி, குமாரபாளையம் ஸ்ரீ வாசவி மஹால் திருமண மண்டபத்தில் கடந்த 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை தலைமை தாங்கி விடியல் பிரகாஷ் தொகுத்து வழங்கினார். குமாரபாளையம் வேதா யோகா மைய மாணவரும் சிரிப்பு யோகா பயிற்சியாளருமான சிரிப்பு யோகி கோபால் கலந்து கொண்டு சிரிப்பு யோகா பயிற்சியை உற்சாகமாக நடத்தினார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல ஊர்களில் மக்களை சிரிக்க வைத்து மகிழ்ச்சியூட்டியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இறுதியாக வேதா யோகா மைய ஆசிரியர் தினேஷ் நன்றி உரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம், மக்கள் மறந்து போன குழந்தைப் பருவ மகிழ்ச்சியை மீட்டெடுத்து, சிரிப்பு என்ற அருமருந்தின் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பெறச் செய்வதாகும். உலக மக்களும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன், இந்த சிரிப்பு யோகா பயிற்சி நடைபெறுகின்றன.