போச்சம்பள்ளி அருகே திமுக கம்பத்தில் தாவெக கொடியேற்றியதால் பரபரப்பு - திமுகவினர் திரண்டதால் போலீசார் குவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சாதிநாயக்கன்பட்டி கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திமுக கட்சியை சேர்ந்த வெண்ணிலா முருகேசன் என்பவர் அவரது சொந்த விவசாய நிலத்தின் ஓரத்தில் திமுகவின் கொடி கம்பம் நடப்பட்டு இருந்தது. 2026 சட்டமன்ற தேர்தல் காரணமாக கம்பத்திலிருந்து திமுக கொடி அகற்றப்பட்டு இருந்தது. சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் தவெக கட்சியினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

 இந்நிலையில் சாதிநாயக்கன்பட்டி கிராமத்தில் தனி நபரின் பட்டா நிலத்தில் அமைந்துள்ள திமுக கொடி கம்பத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் திமுக கொடிக்கம்பத்தில் தாவேக கொடியை ஏற்றியுள்ளார். இன்று காலை வந்து பார்த்தபோது கொடிக்கம்பத்தில் தாவெக கொடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கு திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் குவியத் தொடங்கினர். விவரம் அறிந்து விரைந்து வந்த பாரூர் போலீசார் திமுக கட்சியினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இரவோடு இரவாக கொடியை ஏற்றிய மர்ம நபரை கைது செய்யும் வரை கொடியை அகற்றக் கூடாது என திமுகவினர் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் பதட்டமான சூழல் நிலவுவதால் 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post