மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டித்து ஒப்பந்த பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் ….

 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் உள் மற்றும் புற நோயாளிகள் 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் 100 க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். QPMS என்ற நிறுவனம் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஒப்பந்த அடிப்படையில் மாறி மாறி இப்ப பணியாளர்களுக்கு வேலை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதிதாக வந்துள்ள ஸ்மித் நிறுவனம் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள் சுரேஷ் , விக்னேஸ்வரன், கவியரசன், செந்தில் உள்ளிட்ட 4 பேரையும் பணி நீக்கம் செய்தது.இதனை கண்டித்து ஒப்பந்த பணியாளர்கள் பணியை புறக்கணித்து மருத்துவமனையை முற்றுகையிட்டு உள்ளனர். நான்கு மேற்பார்வையாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மருத்துவ கண்காணிப்பாளர்கள் மற்றும் ஸ்மித் நிறுவனம் பணி நீக்கம் செய்யப்பட்ட நான்கு பேரும் பணியில் தொடரலாம் என உத்தரவாதம் அளித்த பின்பு போராட்டம் கைவிடப்பட்டது பின்னர் ஒப்பந்த பணியாளர்கள் பணிக்கு சென்றனர்  
 
Previous Post Next Post