தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன் குமார் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் அவர்களுக்கு கூத்தாநல்லூர் பகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார் அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அதிமுக பாஜக கூட்டணியும் பிற கட்சிகள் தனியாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர் திமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் குறிப்பாக திமுகவின் ஐந்து ஆண்டு சாதனைகள் மக்கள் மனதில் ஆணி அடித்தது போல் நிற்கிறது அதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் ரூ 8 ஆயிரத்திற்க்கு கூப்பன் வழங்கப்படும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் நரேந்திர மோடி பிரதமராக வந்தார் தமிழகத்தில் மு க ஸ்டாலின் குறை சொல்ல முடியாத தலைவராக இருந்து வருகிறார் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி உறுதியாகி உள்ளது அதிமுகவை பொறுத்தவரையில் கட்சியை காப்பாற்ற முடியாத எடப்படி நாட்டை காப்பாற்ற போகிறார் அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து வருகிறார்கள் தமிழகத்தில் அதிமுக பலவீனப்பட்டு உள்ளது பாரதிய ஜனதா கட்சியால் அதிமுகவிற்கு எந்தவிதமான பலனும் கிடையாது ராமதாசும் சசிகலாவும் இணைந்த கூட்டணி நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் வாங்கக்கூடிய ஒவ்வொரு வாக்குகளும் அதிமுக கூட்டணியில் இருந்து ஒரு செங்கல்லை உருவுவதற்கு சமம் எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் அதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை இந்தியாவிலேயே இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியில் உயர்ந்த மாநிலம் தமிழ்நாடு கல்வி சுகாதாரம் மருத்துவம் வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் சிறந்த மாநிலமாக தமிழகம் செயல்பட்டு வருகிறது தற்போது மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய பியூஸ் கோயல் அரசாங்கத்தில் மந்திரியாக இருக்கிறாரா ? இல்லை வெளிநாட்டில் மந்திரியாக இருக்கிறாரா என்பது அவருக்கே தெரியவில்லை 11.9% பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ்நாடு கல்வியில் இந்திய அளவில் உயர் கல்வி பெற்றோர்களுடைய சராசரி 26.7 விழுக்காடு தமிழகத்தில் 56.6 விழுக்காடு அதிக தொழிற்சாலைகள் ,அதிக தொழிலாளர்கள், பெண் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என விவரங்கள் முழுவதும் மத்திய அரசுதான் வழங்குகிறது ஆனால் மத்திய அமைச்சராக இருக்க கூடியவர் முழு விவரங்களும் தெரியாமல் பேசுவது சிறுபிள்ளைத்தனமான செயலாக இருக்கிறது.
ராமதாசும் சசிகலாவும் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் வாங்கக்கூடிய ஒவ்வொரு வாக்குகளும் அதிமுக கூட்டணியில் இருந்து ஒரு செங்கல்லை உருவுவதற்கு சமம் எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் அதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என கூத்தாநல்லூரில் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன் குமார் பேட்டி
தமிழர் களம் மாத இதழ்
0