திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ். காமராஜ் செருமங்கலம் , காரக்கோட்டை , உடையார் தெரு பகுதியில் வாக்கு சேகரித்தார் . பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர் . அப்போது அவர் பேசியதாவது மூன்றாவது முறையாக வேட்பாளராக நிற்கிறேன் நீங்கள் அனைவரும் என்னை கைவிட மாட்டீர்கள் கை தூக்கி விடுவீர்கள் என்கிற நம்பிக்கையோடு தேர்தலில் போட்டியிடுகிறேன் . என்னை தூக்கி விடுவீர்களா இரண்டு முறை வெற்றி வாய்ப்பை இழந்த எனக்கு ஆறுதலாக இருப்பீர்களா செருமங்கலம் ஊராட்சியில் உடையார் தெருவில் அனைவரும் எனக்கு ஒட்டுமொத்தமாக வாக்களிப்பீர்களா உங்களுடைய ஆதரவு எனக்கு நிறைய இருக்கிறது என்று டி.ஆர். பாலு அவர்களும் டிஆர்பி ராஜா அவர்களும் கடந்த நான்கு நாட்களாக 50 க்கும் 100 க்கும் புடவைகளையும் வேஷ்டி களையும் வாங்கிக்கொண்டு ஆயிரம் 500 பணத்தைக் கொண்டு ஊர் ஊராக பொதுமக்களுக்கு கொடுத்துக் கொண்டு வந்துகொண்டிருக்கின்றனர் . அந்த சூழ்ச்சியில் நீங்கள் விழக்கூடாது . எனக்கு எந்த நேரத்திலும் உறுதுணையாக இருக்க வேண்டும் டிஆர்பி ராஜாவிற்கு அவரது தந்தை பணம் வைத்து உள்ளார் எனக்கு நீங்கள் உறுதுணையாக இருக்கிறீர்கள் . நமது வெற்றியை தடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் மூன்று எஸ் காமராஜ் என்கிற பெயரில் டம்மி வேட்பாளராக திமுகவினர் நிறுத்தி உள்ளனர் . பொது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் உங்களது கவனத்தை சிதறி அடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு நிறுத்தி உள்ளனர் நான் வெற்றி பெற்றால் நீங்கள் எம்எல்ஏ என்கிற அந்தஸ்தை நீங்கள் பெறலாம் . சட்டமன்றத்தில் எஸ்.காமராஜரின் காலடி பட வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் . சட்டமன்றத்தில் எனது காலடி பட்டால் உங்களது காலடி பட்டது போல் நீங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள் உங்களை நான் கட்சி மாற சொல்லவில்லை நீங்கள் கட்சி பார்க்காமல் குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன் என்றார்
பொதுமக்களாகிய நீங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள் உங்களை நான் கட்சி மாற சொல்லவில்லை .நீங்கள் கட்சி பார்க்காமல் குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என மன்னார்குடி அருகே அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் வாக்கு சேகரிப்பு .
தமிழர் களம் மாத இதழ்
0