சென்னை ஏஐடியூசி தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளனம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையர். தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அனைவருக்கும் தேர்தல் பணி அலுவலர்களுக்கு வழங்கப் படுவதைப் போல் வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் ஊதியம்,அலவன்சு வழங்க கோரி ஏஐடியூசி தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளனம் மாநில பொது செயலாளர் பி.எல்.
இராமச்சந்திரன் கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளார்
மேலும் மனுவில் தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் பணிகள் கடந்த மார்ச் 30 ஆம் தேதி முதல் துவங்கி உள்ளன. வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 23ந் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
தேர்தல் நாளான ஏப்ரல் 23ந் தேதி தமிழ்நாட்டில் அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகள், பேருராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்படவேண்டும்.
அரசு உத்திரவின்படி ஏப்ரல் 23தேதி விடுமுறை நாளாகும். வாக்குப்பதிவு அன்று தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ளாட்சி அமைப்புகளால் தூய்மைப்பணியாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
வாக்குச்சாவடியை கூட்டுவது. குப்பைகளை அள்ளுவது, சுண்ணாம்பு போடுவது குடி தண்ணீர் வைப்பது, கழிவறை சுத்தமாக வைத்திருப்பது மற்றும் ஓட்டுப் பெட்டிகளை இறக்கி ஏற்றி விடுவது என்று தூய்மைப் பணியாளர்களே அனைத்து பணிகளையும் செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அதற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. அலவன்சுகொடுக்கப்படுவதில்லைகொடுப்பதோ சோற்றுப் பொட்டலங்கள் மட்டுமே.
தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதியம் அலவன்சு கொடுக்கும் போது தூய்மைப்பணியாளர்களுக்கு ஏன் கொடுப்பதில்லை.
அவர்களின் 15 மணி நேர வேலைக்கு அவர்கள் பெறுவது சோற்றுப் பொட்டலங்கள் தான்.
இது சாதி ரீதியான ஒடுக்குமுறையின் ஒரு அங்கமாகவே AITUC தொழிற்சங்கம் கருதுகிறது. தாழ்த்தப்பட்ட பட்டியல் இன மக்கள் என்ற ஒரே காரணத்தால் அவர்களுக்கு ஊதியம் அலவன்சு மறுக்குப்படுகிறது. வஞ்சிக்கப்படுகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் மனித உரிமைகளை மீறியது. தீண்டாமைக் கொடுமைக்கு உட்பட்டது. வன்கொடுமை எதிர்ப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு செயல் என்று கருதுகிறோம்.
எனவே தாங்கள் தலையிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தேர்தல் நாளன்று தனியாக ஊதியம் அலவன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.