மகளிர் தினவிழா கற்போம் கற்பிப்போம் சேவை மையம்( KKSM) சார்பாக தர்மபுரி ரோட்டரி ஹாலில் கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் B.சேகர் தலைமையில் கௌரவத் தலைவர் A.ரங்கராஜ் மற்றும் KKSM அமைப்பின் பொதுச் செயலாளர் M.S.ராஜன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் மகளிர் அணி தலைவி கலைவாணி, மகளிரணி துணைத் தலைவி வாணி, இளைஞர் அணி செயலாளர் M.மகேந்திரன், ஆகியோர் இவ்விழாவை ஒருங்கிணைந்து நடத்தினர். மேலும் இந்த மகளிர் தின விழாவில் பெரியாம்பட்டி கிராமத்தில் 15 தூய்மை பணியாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். இளைஞர் அணி துணை செயலாளர் M.மணிவண்ணன், பாலக்கோடு பேரூராட்சியில் பணியாற்றும் 15 தூய்மை பணியாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.
கற்போம் கற்பிப்போம் அமைப்பின் சார்பாக கலந்து கொண்ட அனைத்து மகளிர்களுக்கும் தலைவர் சேகர், கௌரவத் தலைவர் ரங்கராஜ், மற்றும் பொதுச்செயளாளர் M.S.ராஜன், ஆகியோர் பரிசுப் பொருட்களும் பாராட்டு சான்றிதழும் வழங்கி கௌரவித்தனர். இப்பாராட்டு விழாவில் மைய நிர்வாகிகள் பாரதி, முருகன், A.கண்ணன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் சாமிநாதன், பாலக்கோடு குமரேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கருணாநிதி, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியில் இளைஞரணி செயலாளர் M.மகேந்திரன் நன்றியுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்