நில ஆக்கிரமிப்பு முயற்சி – நடவடிக்கை கோரி வாலிபர் எஸ்.பி அலுவலகத்தில் மனு


  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுக்கா    பானாவரம் பகுதியில் நில ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட வாலிபர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
பானாவரம் கிராமம் பழைய காலனி பகுதியைச் சேர்ந்த கோகுல் (30) என்பவர் அளித்த மனுவில் கூறியதாவது:
“எங்களது குடும்பத்தினர் பானாவரம் பழைய காலனி பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்களுக்குச் சொந்தமான 6 சென்ட் நிலத்திற்கு (சர்வே எண்: 219/4A) கடந்த 19.02.1962 அன்று அரசு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவரின் மகன் ஜே. மணி மற்றும் அவரது குடும்பத்தினர் எங்களது நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனர்

. இதுகுறித்து தட்டிக்கேட்டபோது அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியும், நிலத்தை விட்டு வெளியேறுமாறு கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். இதனால் எங்கள் குடும்பத்தினர் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த 31.11.2023 அன்று பானாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, நில ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, எங்களது நிலத்திற்கும் உயிருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று மனுவில் கோகுல் கோரிக்கை வைத்துள்ளார்.
Previous Post Next Post