கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி மண்டலச் செயலாளர் பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி, மார்ச், 9- தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் எம்.நெப்போலியன் பிறந்தநாள் விழா  போச்சம்பள்ளி, மத்தூர்  ஆகிய இடங்களில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள்  மற்றும் தொண்டர்களுடன் கேக் வெட்டி  கொண்டாடினர். இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி ஆள் உயரத்திற்கு மலர்களால் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து  இனிப்பு வழங்கி கொண்டாடினர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் மு. ராமகிருஷ்ணன் ஒருங்கிணைப்பில் பர்கூர் தொகுதி செயலாளர்  டாக்டர்.  சரவணன், பர்கூர் தொகுதி தலைவர் ஆல்பர்ட் முன்னிலையில் காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் சக்தி,மாவட்ட மகளிர் அணி மீனா. பிரகாஷ் போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாதுல்லா நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர் இந்த நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் ராகுல், மாவட்ட பொறுப்பாளர் கேப்டன் பிரபாகரன் ஜான் ஆல்பர்ட் பொருளாளர் சாஜித் ,  உள்படை ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post