ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த புங்கனூர் கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுயம்பு மல்லியம்மன் ஆலய 101-ஆம் ஆண்டு மகா பிரம்மோற்சவ மற்றும் உற்சவமூர்த்தி அம்மன் சிலைக்கு பிறந்தநாள் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
புங்கனூர் ஊராட்சி மன்றத் தலைவர் அம்பேத்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஒன்றிய கவுன்சிலர் ஜெயவேல், துணைத் தலைவர் சுமதி ஏழுமலை மற்றும் விழா அமைப்பாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தொடர்ந்து பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்ற நிலையில், மதியம் 2000-பேருக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு புங்கனூர் ராணுவ வீரர்கள் குழுவினரால் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 2 மணி அளவில் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வர, பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்; இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல். ஈஸ்வரப்பன், தொழிலதிபர் ஏ.வி சாரதி, அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எம். சுகுமார், விழா குழுவினர் ஊர் நாட்டான்மை தாரர்கள் மற்றும பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.