ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று ஆற்காடு பழைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா மற்றும் எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் போது தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்கள் எழுப்பிய நிலையில், கலவை சாலையில் திரண்டிருந்த கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆற்காடு பஜார் வீதியில் உள்ள திருவள்ளுவர் சிலை, பேருந்து நிலையம் அருகேயுள்ள காந்தி மற்றும் அம்பேத்கர் சிலைகள் மற்றும் அண்ணா சாலை அண்ணா சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நிகழ்வு, கூட்டணி கட்சித் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதிமுக ஆற்காடு தொகுதி வேட்பாளர் தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
தமிழர் களம் மாத இதழ்
0