மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் , மரு.ச.பொற்செல்வன்,எம்.பி.பி.எஸ்,டி. பி.ஹச், அவர்கள் உத்தரவின்படியும், வட்டார மருத்துவ அலுவலர் மரு. தனசேகரன், எம்.பி.பி.எஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருப்பரங்குன்றம் வட்டாரம், மழைகாலம் வரும்முன்னர் டெங்கு, சிக்குன்குனியா போன்ற தொற்று நோய்கள் தடுப்பதற்கும், கொசுக்களின் உற்பத்தியாவதை தடுக்கும் பொருட்டு, அனைத்து கிராம உட்பட்ட கிராமங்களில் உள்ள தேவையற்று இருக்கும் பழைய டயர்களை அகற்றும் பணிகள் நடைபெற்றது.
இம்முகாமில் நிலையூர் -1 பிட் ஊராட்சிக்குட்பட்ட கூத்தியார்குண்டு, பாரப்பத்தி ஊராட்சிகளில், பயன்பாடற்ற டயர்களை அப்புறப்படுத்தும் பணிகளை கிராம ஊராட்சி செயலாளர்கள் மூலம் , துப்புறவு பணியாளர்களையும் மற்றும் தற்காலிக டெங்கு மஸ்தூர்கள் மூலமும் அகற்றப்பட்டது. வல்கனைசிங் தொழில் செய்யும் உரிமையாளர்களிடம், பயன்பாடற்ற டயர்களை திறந்தவெளியில் வைக்காமலும், டயர்களை மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று நலக்கல்வி அளிக்கப்பட்டது. இப்பணிகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வே.முருகேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கருப்பசாமி, அழகுமலை, சிவப்பிரசன்னா, மற்றும் சுரேஸ்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.