ஐக்கிய விவசாய சங்கம் அரசியல் சார்பற்றது அமைப்பின் சார்பில் குறைந்தபட்ச ஆதாரங்களை நிர்ணய சட்டம் கொண்டு வரவும் எம் எஸ் ராமநாதன் குழு பரிந்துரை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பதிவுகளை வலியுறுத்தி பிப்ரவரி 7ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகள யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். நாகப்பட்டினம் நகரத்திற்கு 8ம் தேதி இரவு வருகை தந்தது. 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் அண்ணா சிலை அருகே வரவேற்று ஊர்வலமாக பொதுக்கூட்ட மேடை நோக்கி பேரணி சென்றனர், பின்னர் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில அமைப்பு செயலாளர் எஸ்.ஸ்ரீதர் தலைமை வகித்தார்.நாகை மாவட்ட செயலாளர் வேதை கருணைநாதன் வரவேற்றார்.மாவட்டத் தலைவர் புலியூர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற ஜெக்தீப்சிங் தல்லேவால் பேசியதாவது:
மத்திய அரசு அமெரிக்காவோடு வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. பாராளுமன்றம் நடைபெறுகிற போது பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்காமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட எடுத்து இருக்கிற நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. விவசாயிகளிடம் கருத்தறியாமல் வேளாண் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தம் மூலம் அமெரிக்காவிடம் இந்திய விவசாயிகளை
அடிமைப்படுத்தி விட்டது. ஒட்டுமொத்தமாக இந்திய விவசாயிகளை மிக மோசமான நிலைக்கு இந்த ஒப்பந்தம் தள்ளப் போகிறது. எனவே ஒப்பந்தத்தை உடனடியாக பிரதமர் திரும்ப பெற முன்வர வேண்டும்.
குறைந்தபட்ச ஆதாரங்களை நிர்ணய சட்டத்தை கொண்டு வர வேண்டும் விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுவதையும் நிபந்தனின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் இலவசம் மின்சாரத்தை ரத்து செய் அடிப்படை நோக்கம் கொண்ட மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எம் எஸ் ராமநாதன் குழு பரிந்துரை நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுமையிலும் பிரச்சாரத்தை பிப்ரவரி 7ல் கன்னியாகுமரி துவங்கி காஷ்மீர் வரை செல்ல உள்ளோம் நிறைவாக டெல்லியில் மார்ச் 19ஆம் தேதி டெல்லியில்
ராம்லீலா மைதானத்தில் இந்தியா முழுமையிலும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் விவசாயிகள் பேரணியில் நிறைவு செய்ய உள்ளோம்.விவசாயிகள் அனைவரும் அப்பேரணியில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார்,
தேசிய இணை ஒருங்கிணைப்பாளர்கள் கர்நாடக சாந்தகுமார்,ஹரியானா அபிமன்யு கொஹார்,
தமிழக ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் தலைவர் பி
அய்யாக்கண்ணு,இணை ஒருங்கிணைப்பாளர்கள் சிவகங்கை எல். ஆதிமூலம் திருவாரூர் பாலசுப்ரமணியன்,மாநில இளைஞரணி தலைவர் மேலூர் அருண்,தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர் திருப்பதி வண்டையார்,
மாநிலத் துணைத் தலைவர் எஸ் கிருஷ்ணமணி, திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன்,மாவட்ட செயலாளர் சரவணன்,மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் துணை செயலாளர் பன்னீர்செல்வம் கடலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மாவட்ட தலைவர் அன்பழகன் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் வடக்கு மாவட்ட தலைவர் தாசன் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பத்மநாபன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர் .
பஞ்சாப் ஹரியானா, உத்திரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா,லிட்டர் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த முன்னணி தலைவர்கள்
30 பேர்
இக்குழுவில் இடம்
பெற்றுள்ளனர்