இன்றைக்கு திமுக ஆட்சியை பொருத்தவரை நாள் ஒரு பொய் பொழுது ஒரு பொய் என்று பொய்யையே மூலதனமாக வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள் என மன்னார்குடியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு .


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற 13ஆம் தேதி திமுக அரசை கண்டித்து மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து , 24 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் நாம் பெற்றோர்களையும் முன்னோர்களையும் வணங்குவது போல புரட்சித்தலைவி அம்மா அவர்களை வணங்குகிற தொண்டர்கள் தான் நிர்வாகிகள் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் . அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது பொய் வழக்குகளை ஜோடித்து தினந்தோறும் அம்மாவுக்கு ஏதாவது ஒரு மன உளைச்சலை ஏற்படுத்தி பல்வேறு ஊன்வினைவித்தார்கள் திமுகவினர் . அதை எல்லாம் நாம் பசுமரத்து ஆணி போல் அப்படியே நெஞ்சினில் நிலை நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறோம் . புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் நிலைத்து நிற்குமா என்கிற அந்த கேள்விகளுக்கு பதிலாக வந்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி . அதிமுகவில் அமைந்திருக்கின்ற கூட்டணியை பார்த்து மு.க.ஸ்டாலின் தினந்தோறும் பயத்திலேயே இருக்கிறார் . அண்ணா திமுக கூட்டணி நாளுக்கு நாள் பலமாக்கிக் கொண்டே இருக்கிறது . இன்றைக்கு திமுக ஆட்சியை பொருத்தவரை நாள் ஒரு பொய் பொழுது ஒரு பொய் என்று பொய்யையே மூலதனமாக வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றார் . இந்த ஆலோசனை கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் சிவா. ராஜமாணிக்கம் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்.வாசு கிராம் , ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், ஜீவானந்தம் , ராஜா.சேட் , நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்
Previous Post Next Post