ராணிப்பேட்டை:
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் முன்வைத்த முக்கியக் கோரிக்கைகள் வலியுறுத்தினார்
வருவாய்த் துறைக்கெனத் தனிச் சிறப்புப் பணிச் சட்டத்தை உருவாக்க வேண்டும்; அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உரிய ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும்; கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பிடிக்கப்படும் 10\% தொகையை ரத்து செய்ய வேண்டும்; தற்காலிகப் பணி நியமனங்களைக் கைவிட்டு, காலிப் பணியிடங்களை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
நிபந்தனைத் தளர்வு: கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) கிராமங்களிலேயே தங்கிப் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் மற்றும் அவர்களுக்கான கல்வித் தகுதியைப் பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும்.
போராட்டத்தின் போது உயர் அலுவலர்களின் பணி நெருக்கடிக்கு எதிராக முழக்கமிட்ட ஊழியர்கள், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, அங்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.