திருவாரூர் தனியார் அரங்கில், திருவாரூர் தமிழ் சங்கம் சார்பில் உலக தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது
ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த விழா திருவாரூர் தமிழ் சங்க தலைவர் புலவர். இரெ.சண்முகவடிவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கவிஞர் நா.மு. நந்தன் அவர்களின் இதயக்கண்ணாடி என்னும் கவிதை நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை தமிழ் சங்க தலைவர் புலவர் சண்முகவடிவேல் வெளியிட,
அந்நூலை புரவலர் கே எஸ் எஸ் தியாகபாரி பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ்சங்க செயலாளர் ஆரூர் அறிவு ,மருத்துவர் ஏ.கே.எம் செந்தில் மற்றும் நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
FILE NAME :TVR TAMIL BOOK RELEASE NEWS 28.02.2026.