உத்தமபாளையம் அருகே பொட்டிபுரம் வருவாய் கிராமம் சர்வே எண் 311/1 இல் உள்ள ஸ்ரீ பட்டாலம்மன் கோவில் அரசு பதிவேட்டில் மற்றும் வரைபடத்தில் கோவில் பெயரை பதிவு செய்ய வலியுறுத்தி உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!


தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பொட்டிபுரம் வருவாய் கிராமம் சர்வே எண் 311/11 இல் உள்ள ஸ்ரீ பட்டாலம்மன் கோவில் அரசு பதிவேடு மற்றும் வரைபடத்தில் கோவில் பெயரை பதிவு செய்ய வலியுறுத்தி அருந்ததியர் சமுதாய மக்கள் அப்பகுதியில் சுமார் நூறு குடும்பங்களுக்கு மேலாக பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள் இவர்களின் மூதாதையர்கள் பொட்டிபுரம் வருவாய் கிராமம் தெற்கு உட்பட்ட அப்பகுதியில் பட்டியல் வகுப்பைச் சார்ந்த அருந்ததியர் சமுதாய மக்கள் ஸ்ரீ பட்டாளம்மன் கோவிலை கட்டி வழிபாடு நடத்தி தொடர்ந்து பாரம்பரியமாக பராமரித்து வருகிறார்கள் இவர்களது கோவில் உள்ள நிலமானது அரசு பதிவேட்டில் பதிவு செய்யவில்லை வரைபடத்திலும் பதிவிடவில்லை எனக் கூறி இன்று உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் என பல்வேறு முறை கோரிக்கை மனு அளித்திருப்பதாக கூறுகிறார்கள் அரசு பதிவேட்டில் பதிவு செய்து வரைபடத்தை உறுதி செய்து தருமாறு உத்தமபாளையம் கோட்டாட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த கோரிக்கையை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நிறைவேற்றாவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பட்டியல் வகுப்பைச் சார்ந்த அருந்ததியர் மக்கள் கூறிச் சென்றனர்.......
Previous Post Next Post