அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வாரத்தில் சுமார் 80 குடும்பத்தை சார்ந்த பட்டியல் சமுதாய மக்களுக்கு பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.!



தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் சுமார் 80 குடும்பத்தைச் சார்ந்த பறையர் மற்றும் அருந்ததியர் சமுதாய பட்டியல் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் இவர்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள்.
 இந்த குடியிருப்புகளுக்கு இதுவரை குடிநீர் வசதி தெரு விளக்கு மின் வசதி சாக்கடை வசதி சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து தரவில்லை நகராட்சி நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

 எவ்வித பலனும் அளிக்கவில்லை இதனை கேள்விப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தற்போது பெரியகுளம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் சுசி தமிழ் பாண்டியன் அவர்கள் பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியை சர்வே செய்து பட்டா வழங்க வேண்டும்.

 மேற்படி நிலம் ஆனது அரசு பயன்பாட்டிற்கு பயன்படாத நிலமாக இருந்து வருகிறது ஆகவே அரசாணை எண் 96 ன் படி 60 ஆண்டு காலமாக குடியிருந்து வரும் 80 குடும்பத்தைச் சேர்ந்த பட்டியல் சமுதாய மக்களுக்கு பட்டா வழங்கி அடிப்படை வாழ்வாதாரங்களை உருவாக்கி தர வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்தனர் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என மனு அளிக்க வந்திருந்தனர்....

பேட்டி: வழக்கறிஞர் சுசி. தமிழ் பாண்டியன் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர்.
Previous Post Next Post