தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வள்ளுவர் சிலை பகுதியில் குமரேசன் என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது கடையில் சத்யா என்ற பெண் வேலை பார்த்து வருகிறார். கடையில் உள்பகுதியில் சத்யா என்பவர் அவரது செல்போனை வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் பட்ட பகலில் டீக்கடையில் அதிக அளவில் கூட்டங்கள் இருக்கும் நேரத்தில் அங்கு வந்த ஒரு இளைஞர் கடையின் உள்ளே இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேக வேகமாக தப்பி சென்றுள்ளார்.
மேலும் சிறிது நேரம் கழித்து சத்தியா தனது செல்போனை வைத்த இடத்தில் பார்த்த போது செல்போனை காணவில்லை என தேடிப் பார்த்தபோது செல்போன் கிடைக்கவில்லை,
மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சியை வைத்து பார்க்கும் போது இளைஞர் ஒருவர் செல்போனை திருடி செல்வது சிசிடிவி கட்சியின் வழியாக தெரிய வந்தவை தொடர்ந்து
இதுகுறித்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் சத்யா சிசிடிவி காட்சிகளை வைத்து புகார் அளித்துள்ளார்.
மேலும் பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கஞ்சா மற்றும் மது போதைக்காக பணம் தேவைப்படுவதால், இளைஞர்கள் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பெரியகுளம் பகுதியில் காவல்துறையினர் முறையாக நடவடிக்கை மேற்கொள்ளாததால், தொடர்ந்து பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் திருட்டின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கஞ்சா மற்றும் மதுபோதைக்காக தொடர்ந்து இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.