விசிக கட்சியினர் சாலை மறியல் போராட்டம் கலவை அருகே பரபரப்பு

விசிக கட்சியினர் சாலை
 மறியல் போராட்டம் 
கலவை அருகே பரபரப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் கிராம கூட்டு சாலையில் அமைந்துள்ள  அம்பேத்கரின் சிலையை சாலை அமைக்கும் பணிக்காக  வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து அம்பேத்கரின்  சிலையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் இதனைய கண்டித்து   ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் குண்டாசார்லஸ்  தலைமையில் சாலை  மறியல் போரட்டம் செய்தனர் 
அதனைத் தொடர்ந்து  கலவை வட்டாசியர் அலுவலகம் எதிரே ஆர்பாட்டம் நடத்தினர் மேலும் சிலையின் பீடத்தை உடைக்க முயன்ற நபர்கள் மீது வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது  கலவை  வட்டாசியர் விசிக கட்சியினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர் 
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் போராட்டத்தை அடுத்து நெடுஞ்சாலை துறையினர்  புரட்சியாளர் அம்பேத்கர்  சிலையை எடுக்காமல் ரவுண்டனா அமைத்து தருவதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடபட்டது.
Previous Post Next Post