உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு விடியல் ஆரம்பம் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

குமாரபாளையம்:
உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு, விடியல் ஆரம்பம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விடியல் ஆரம்பம் அறக்கட்டளையின் தலைவர் விடியல் பிரகாஷ் முன்னிலை வகித்தார். அவர் மாணவர்களிடையே உரையாற்றும்போது, அறிவியல் வளர்ச்சியின் முக்கியத்துவம், அறிவியல் சிந்தனை மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், கேள்வி கேட்கும் திறனையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் ஜமுனா, தீனா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post