செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த காவேரிப்பட்டினம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் மற்றும் மாவட்ட கழக செயலாளர் அசோக்குமார், நாகரசம்பட்டி பேரூராட்சி செயலாளர். அண்ணாதுரை, அதிமுக நிர்வாகி வடிவேலன், கழக நிர்வாகிகள் மஞ்சுநாதன், ஐயப்பன், ரவி மற்றும் தொண்டர்கள் அச்சரப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
அப்போது அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கட்சியின் கொள்கைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டதுடன், இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த தீவிர பிரச்சாரத்தில் உள்ளூர் கழக நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.