தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மழைக்கால பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதன் ஒருபகுதியாக, தேனி மாவட்டம் தமிழர் கேரள எல்லையாக உள்ள கம்பம் - குமுளி மலைச் பாதையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் அவர்கள் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவ கிருஷ்ணமூர்த்தி நேரடி களஆய்வு மேற்கொண்டார்கள்
மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்படுவதைத் தடுக்கவும், போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அவர் நேரில் பார்வையிட்டார்.
ஆய்வின் போது, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, மின்சார வாரியம் மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.