சேலம் பஸ் நிலையத்திலிருந்து தர்மபுரி சென்ற தனியார் பேருந்தில் 04.10.2026 மாலை மூன்று மணி அளவில் ஏறிய பயணி பூசாரிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நிற்குமாறு பயணி ஒருவர் நடத்துனரிடம் பயண சீட்டு கேட்டதற்கு பூசாரிபட்டி பஸ் நிலையத்துக்கு பஸ் நிற்காது என்று கூறி பயணியை தகாத வார்த்தையில் திட்டியும், கழுத்து பகுதியில் அடித்து காயம் ஏற்பட்டுள்ளது.



சேலம் பஸ் நிலையத்திலிருந்து தர்மபுரி சென்ற தனியார் பேருந்தில் 04.10.2026 மாலை மூன்று  மணி அளவில் ஏறிய பயணி  பூசாரிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நிற்குமாறு பயணி ஒருவர் நடத்துனரிடம் பயண சீட்டு கேட்டதற்கு பூசாரிபட்டி பஸ் நிலையத்துக்கு பஸ் நிற்காது என்று கூறி பயணியை தகாத வார்த்தையில் திட்டியும், கழுத்து பகுதியில்  அடித்து காயம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பணம் திருட பேருந்தில் ஏறினாயா என்று கூறி நடத்துனர்  திட்டியுள்ளார். உடனடியாக பூசாரிப்பட்டி  உள்ள பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்த பயணி பூசாரிப்பட்டி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அந்த பேருந்தை பிடித்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். உடனடியாக தீவட்டிப்பட்டி  காவல் நிலைய அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் காவல் நிலையம் வந்து புகார் தருமாறு கூறினர். அதன் பின்பு பேருந்தை  விடுவித்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேருந்தை நிறுத்தி வைத்தனர். இது போன்று நடக்காமல் இருக்க உடனடியாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கூறுகின்றனர்.
Previous Post Next Post