வையம்பட்டி ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்ஜனநாயகத்தை பாதுகாக்க மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வலியுறுத்தி நடைபயணப் பரப்புரை பிரச்சாரம் இயக்கம் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை


மணப்பாறை ஆக 03
மணப்பாறை தாலுகா வையம்பட்டி ஒன்றியம் முகவனூர்  ஊராட்சியில் மம்பத்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது 

கூட்டத்திற்கு சக்தி (எ) பழனிச்சாமி தலைமை வகித்தார் ஒன்றிய செயலாளர் தங்கராஜ்  முன்னிலை விகித்தார்   திருச்சி புறநகர் மாவட்ட பொருளாளர் ஜனசக்தி உசேன் இன்றைய அரசியல் நிலை குறித்து பேசிய போது  செப்டம்பர் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் அதிகரித்துவரும் அத்தியாவசிய விலை உயர்வுக்கு முடிவுக்கட்ட,படித்த இளைஞர்களுக்கு வேலை கொடு, எல்லோருக்கும் பொது மருத்துவம், இலவச கட்டாயக் கல்வி கொடு
மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உடனே அமுல்படுத்திட
விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக் கிட,தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதை கைவிட
ஜனநாயகத்தை பாதுகாக்க மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்திட
விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பறிப்பதை கைவிட தலித், பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை சுரண்டலுக்கு நீதி வழங்க கேட்டு மாபெரும் பேரணிகுறித்து ஆகஸ்ட் 6 முதல்  15 வரை வையம்பட்டி ஒன்றியம் முழுவதும் மக்களை  நடைபயணமாக சந்தித்து  பரப்புரை பிரச்சாரம் மேற்கோள்வது டெல்லி பேரணியில் பங்கேற்பது என்று உரை நிகழ்த்தினார் 

இன்றைய துணை செயலாளர் ஆரோக்கியம் சுந்தர்ராஜ்    சண்முகானந்தம் ராமசாமி தேவராஜ் ராணி பாலு உட்பட. ஒன்றிய குழு உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்
Previous Post Next Post