குமாரபாளையம், ஆக. 5:நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளி, அருவங்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் சிறப்பாக கல்வி பயிலும் 10 பெண் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு,


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளி, அருவங்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் சிறப்பாக கல்வி பயிலும் 10 பெண் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யும் வரை ஆண்டுதோறும் பள்ளிப் பை, நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் கல்வி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி குமாரபாளையம் ஸ்ரீ வாசவி மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விடியல் பிரகாஷ் தலைமை தாங்கினார். அங்கப்பன் முன்னிலை வகித்தார்.

சென்னை சுரபி பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன், தேர்வு செய்யப்பட்ட 10 மாணவிகளுக்கு பள்ளிப் பைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி, தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்கி உயரிய நிலையை அடைய வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் ஜமுனா நன்றியுரை வழங்கினார்.

இதில் எண்ணங்களின் சங்கமம் நிறுவனர் பிரபாகர், குப்புசாமி, தீனா, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இத்திட்டத்தை பாராட்டினர்.
Previous Post Next Post