தேசிய உழைப்பாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம் நிறைவு!
சோளிங்கர்: தேசிய உழைப்பாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நிறுவனத் தலைவர் வே.பாலாஜி தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் அண்ணா சி.கணேசன், மாநிலப் பொதுச் செயலாளர் சி.திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் அணித் தலைவர் கோ.பழனி, மாநில இளைஞர் பொதுச் செயலாளர் சி.பாலாஜி, மாநில ஒருங்கிணைப்பாளர் கோ.ஆனந்தன், மாநில நிர்வாகச் செயலாளர் ந.ராஜசேகர், மாநில விவசாய அணித் தலைவர் சங்கரன், மாநில நிர்வாக ஒருங்கிணைப்பாளர் P.கணேசன் மற்றும் மாநில தொழிற்சங்கத் தலைவர் கோ.பழனி ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தா.இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். தென்காசி மாவட்டத் தலைவர் மு.முத்துலட்சுமி, கடலூர் மாவட்ட மகளிர் அணித் தலைவி ர.கலையரசி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாநில அமைப்புச் செயலாளர் உ.தாவூத் சாரிப், மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் மு.பரமேஸ்வரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநிலச் செய்தித் தொடர்பாளர் சு.ஆனந்தன் தலைமையுரையாற்றினார்.
நிறுவனத் தலைவர் பாலாஜி கருத்துரை:
கூட்டத்தில் தலைமை உரையாற்றிய நிறுவனத் தலைவர் வே.பாலாஜி பேசியதாவது:
"உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதே நமது இயக்கத்தின் முதன்மை நோக்கம். கழகத்தின் வளர்ச்சிக்காக அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் ஒருங்கிணைந்து தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். குறிப்பாக, அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வுகாண நிர்வாகிகள் உறுதுணையாகச் செயல்பட வேண்டும்."
இக்கூட்டத்தில் மாநில இணைத் தலைவர் அ.ரவி, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் அ.பிலால், ராணிப்பேட்டை மாவட்ட தொழிற்சங்க செயலாளர் செந்தில், விருதுநகர் மாவட்ட மருத்துவ அணித் தலைவர் மா.ராமகோபால், மதுரை மாவட்டத் தலைவர் ப.சக்தி, கோயம்புத்தூர் மாவட்டச் செயலாளர் ஜெ.சாமிநாதன், ராணிப்பேட்டை மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் அ.ஜெகநாதன் மற்றும் தென்காசி மாவட்ட மருத்துவ அணித் தலைவர் செ.மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கழகத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்துக் கலந்துரையாடினர்.