தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி.!



தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக  வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டு வந்த நிலையில், காலை 11 மணி  அளவில் திடீரென மிதமான சாரல் மழை பெய்யத் துவங்கியது

அதனைத் தொடர்ந்து,பெரியகுளம், கீழ வடகரைபெருமாள்புரம்,அழகர்சாமிபுரம், கள்ளிப்பட்டிதாமரைக்குளம், உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான சாரல் மழை பெய்தது.

இந்தத் மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசி வருவதால், அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Previous Post Next Post