கல்குவாரிகளின் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என தேனி மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.
தேனி மாவட்டத்தில் கனிமவளத்துறை அனுமதி பெற்று 52 கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது இந்தக் கல்குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவில் கனிம வளங்கள் வெட்டப்படுகிறதா என கடந்த மாதம் ட்ரோன் மூலம் குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனால் கனிம வளம் வெட்டுவதற்கு இணையதளம் வாயிலாக வழங்கப்படும் அனுமதிச்சீட்டு கடந்த 15 நாட்களுக்கு மேலாக வழங்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் தங்களது தொழில் மற்றும் தங்களிடம் பணி புரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு கட்டுமான தொழிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி தேனி மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
கல்குவாரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை வந்த பின் அனுமதி கொடுக்கப்படும் என கனிம வள உதவி இயக்குனர் தெரிவித்ததாகவும் ஆனால் ஆய்வு மேற்கொண்டு பல நாட்கள் ஆகியும் தற்போது வரை அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
மேலும் சென்னை கனிமவள இயக்குனர் அலுவலகத்திற்கும் அனுமதி சீட்டு வழங்க வேண்டி கடிதம் அளித்திருந்தும் இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.
இதனால் குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு கட்டுமான தொழிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
எனவே குவாரிகளில் கற்களை வெட்டி எடுக்கும் பணி மேற்கொள்ள அனுமதி சீட்டினை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்......